Thursday, 5 November 2009

LARGE HEARTED GRANDSON

ராமநாத ஐயருக்கு ஒரே பிள்ளை சங்கரன். அவருக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை என்பதால் அவரும் அவருடைய மனைவீ மீனாக்ஷியும் சங்கரன் மேல் கொள்ளை பாசம் கொண்டிருந்ததில் வியப்பில்லை.வசதியான வேளையில் இருந்து ரிடையர் ஆன ராமநாதனுக்கு வசதிக்கு ஒரு குறையும் இல்லாததால் சங்கரன் ஒரு இளவரசன் போல், ஆள் படையுடன், வளர்க்கப்பட்டான். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் காலேஜுக்கு கும்பகோணமோ அல்லது தஞ்சாவூரோ சென்றுதான் படிக்கவேண்டும் என்றவுடன் ராமநாதனும் அவர் மனைவியும் பிள்ளையை விட்டுப் பிரிந்து இருப்பதை நினைத்து மிக வருந்தினர்.நல்ல  வசதியாக வளர்க்கப்பட்டாலும் சங்கரன் படிப்பில் மிக நன்றாக விளங்கியதால் எல்லாவற்றிலும் முதல வகுப்பில் தேறினான். P.U.C முடித்து CA படிக்க நுழைவு தேர்வில் வெற்றியும் கிடைத்ததும் ஒரு பெரிய ஆடிட்டரிடம் ஆர்டிகள் க்லார்காக சேர்ந்து தஞ்சாவூரிலேயே ஒரு விடுதியில் தங்கி வந்தான். நன்றாக படிக்கும் சங்கரன் CAவில் ஐந்தாவது ராங்கில் பிரமாதமாக தேறியதில் வியப்பொன்றும் இல்லை.  நல்ல மதிப்பெண்களுடன் தேறியதால் சங்கரனுக்கு சிடி பாங்க் ந்யுயார்க்கில் இருந்து வேலைக்கு அழைப்பு வந்தது.வசதிக்கு ஒரு குறையும் இல்லாத போது நாடு விட்டு வெளி நாடு சென்று வேலை பார்க்கவேண்டிய அவசியம் இல்லை, இந்தியாவிலேயே ஒரு நல்ல வேலைக்கு செல்லும்படி சங்கரனிடம் ராமநாதன் மன்றாடினார். பெரிய பாங்கில் கிடைத்த வாய்ப்பை நழுவ விட மனம் இல்லாமல்,ரெண்டு வருடங்களில் கண்டிப்பாக திரும்பி விடுவதாக சொல்லி அமெரிக்க பயணம் ஆனான் சங்கரன்.

ஒரு வருடத்தில் அங்கேயே பிறந்து வளர்ந்த சித்ரா எனும் பெண்ணுடன் ஆபீஸில் சிநேகமாகி அவளையே திருமணமும் செய்ய முடிவு செய்தபின் ராமனாதனால் ஒன்றும் மறுப்பு கூற இயலவில்லை. விளையாட்டாக ஐந்து வருடங்கள் கழிந்தது. சங்கரனுக்கு ஒரு மகன் பிறந்து அவனுக்கு நான்கு வயது ஆகியிருந்தது. இதற்கிடையில் பல முறை அமெரிக்காவுக்கு வருமாறு சங்கரன் விடுத்த அழைப்பை ராமநாதனும் அவர் மனைவியும் ஏற்க மறுத்துவிட்டனர். ஆசாரமும் ஆன்மிகமுமே வாழ்க்கையாக கொண்டிருந்த ராமனாதனால் அமெரிக்க வாழ்கையை ஏனோ ஏற்க இயலவில்லை. சங்கரன் மகன் கணேஷுக்கு ஒன்பது வயதானதும் அவனுக்கு பூணல் போட ஏற்பாடு செய்து,அவர்கள் பேரனை  பார்க்க கண்டிப்பாக வரவேண்டும் என்று டிக்கட்டும் அனுப்பிவைத்தான். மறுக்க முடியாமல் ராமநாதனும் அவர் மனைவியும் ந்யுயார்க் பயணம் ஆனார்கள்.

ஏர்போர்ட் சென்று அழைத்து வந்த சங்கரன், கூட தன் மகன் கணேஷையும் அழைத்து சென்றான். கணேஷை பார்த்த ராமநாதனும் அவர் மனைவியும், அவன் அப்படியே சங்கரனை வார்ப்பு எடுத்தாற்போல் இருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தனர். பூணல் மிக நன்றாக நடந்தேறியது. தாத்தா பாட்டி என்று அவர்களிடம் ஒட்டிக்கொண்ட கணேஷுக்கு ராமநாதனின் கம்பீரமான தோற்றமும் அவரது உண்மையான பாசமும் அவரிடம் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியதில் வியப்பில்லை, இத்தனை வருடங்கள் ஏன் வரவில்லை என்று அவரை கேட்டதற்கு, ராமநாதன் தங்களுக்கு இந்திய வாழ்கை முறை மிகவும் பிடித்து விட்டதால் அமேரிக்கா வர இயலவில்லை என்று கூறினார். மிக புத்திசாலியான கணேஷுக்கு அவர் முகத்தில் எப்போதும் இருக்கும் ஒரு சோகத்தின் காரணம் அறிய ஆவலாக இருந்தான். ஒரு நாள் தனியாக இருந்த ராமனாதனை பார்த்து, " Thaatha, I see that you always look like longing for something that you have lost! What is troubling you? Can you please share it with me." என்றான். மனதில் பொங்கி எழுந்த எண்ணங்களை மறைக்க இயலாமல், கண்ணில் வழியும் நீருடன் அவனை நோக்கி "சொல்லறேன் கணேஷ்." என்று பேச ஆரம்பித்தார் ராமநாதன்.

ஒரே பிள்ளையான சங்கரனை தஞ்சாவூரில் படிக்க அனுப்புவதையே மனம் விரும்பாததையும், அவன் அவர்களை பிரிந்து அமேரிக்கா சென்றதும் தன் மனைவி அதிர்ச்சியில் ஒரு வருடம் பேசாமல் பிரமை பிடித்தாற்போல் இருந்ததையும் சொல்லிவிட்டு, சங்கரன் இல்லாமல் தனியாக வாழ்வதில் அவர்களுக்கு பிரியம் இல்லை என்றும் சொன்னார். கண் இமைக்காமல் கேட்டுக்கொண்டிருந்த கணேஷ் அவரை கட்டி அணைத்து ஒரு முத்தம் கொடுத்து விட்டு, " Thaatha this is a simple matter. You should have told me earlier," என்று கூறியவாறே வெளியில் சென்றான்.

அன்று இரவு சங்கரனிடம் தங்களுக்கு இந்தியா செல்ல ஏற்பாடு செய்யுமாறு கேட்ட ராமநாதனிடம் இன்னும் ஓரிரு மாதம் இருங்களேன் அப்பா என்றான் சங்கரன். பக்கத்தில் இருந்த கணேஷ் "Yes Thaatha, my exams will be over by this month, so that I can also plan to leave with you to India" என்றதும் அதிர்ந்து போனான் சங்கரன். என்னடா சொல்லறே நீ யும் போறயா? என்று கேட்டான். கணேஷ் அமைதியாக, "Dad, you know I do not dig this place. I am so excited about doing my IIT and then my MBA in Ahmedabad. So let me do atleast the remaining 9 years of my studies in India and be with Thaatha and Paatti..I want to give them their lost happiness, Dad.".என்றான். என்ன சொல்வது என்று அறியாமல் நின்றனர் சங்கரனும் அவனது மனைவியும். சிறு பிள்ளையென நினைத்த கணேஷின் அற்புதமான சிந்தனையும், தங்கள் மனதில் இருந்த ஆசையை தீர்க்க அவன் செய்த காரியத்தின் சிறப்பையும் கண்டு மனம் உருகி மெய் மறந்தார் ராமநாதன்.

4 Comments:

 1. sundara raman.k said...
  quite a moving story and I liked the grandson'sdetermination to do something for the grandfather.May his tribe increase
  Anonymous said...
  Good story imparting love affection for elders in the family. Could relate to it readily!
  lakshmi said...
  very emotionally touching story....we sometimes have a lot to learn from our kids....
  kranjini said...
  opppss you write Tamil....
  nice story...loved it...

Post a CommentRelated Posts with Thumbnails