Saturday 10 October 2009

Deepavali

சாரங்கன் கும்பகோணத்தில் கணக்கு வாத்தியாராக ஒரு சிறு பள்ளியில் வேலை  பார்த்து வந்தார் தன ஒரே மகன் கணேஷ் நன்றாக படித்து பள்ளியில் முதல மாணவனாக தேர்வு பெற்றதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி.பின்னர் ஓராண்டு  காலேஜ் பின் ஐ ஐ டி சென்னையில் கம்ப்யுட்டர் சயின்ஸ் பயின்று அதிலும் முதல ராங்கில் தேர்ச்சி பெற்றான். படிப்பு முழுவதும் ச்காலர்ஷிப்பிலேயே செய்ததால் சாரங்கனுக்கு செலவு வைக்க வில்லை. பின்னர் தான் அமெரிக்கா சென்று மேல்படிப்பு படிக்க விரும்புவதாகவும் அதற்கும் அந்த யுனிவர்சிடியே எயடு கொடுப்பதாகவும் சொன்னவுடன் சாரங்கனால் மறுப்பு சொல்ல இயலவில்லை.

இரண்டு  ஆண்டுகளில்   எம்எஸ் படிப்பும் முடிந்து. அமெரிக்காவில மிக பிரபலமான ஒரு  சாப்ட்வேர்   கம்பெனியிலேயே    ஆராய்ச்சி  பிரிவில்  வேலை  வாய்ப்பு கிடைத்ததாக கணேஷ் எழுதியதை பார்த்த சாரங்கன் தன மனைவியிடம் கூறினார். ஏம்மா கல்யாணி, நம்ம குழந்தை கடைசி காலத்திலே நம்ம கூட இருக்க மாட்டான் போலே தோன்றதே என்று அங்கலாய்தவரிடம் என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தாள் கல்யாணி.

எப்படியும் தீபாவளிக்கு வருகிறேன் என்று கணேஷ் சொன்னதில் சற்று மகிழ்ந்த சாரங்கன் ரெண்டு மாதத்தில் வரும் தீபாவளியை எதிர் நோக்கி இருந்தார். சாயங்காலம் சற்று காலாற நடந்துவிட்டு வர எண்ணி கடைத்தெரு பக்கம் சென்றவரை, சாரங்கா என்ற குரல் அழைக்கவே திரும்பி பார்த்தார். அவருடன் படித்த ஜானகி ராமன் என்று அறிந்ததும் ஒரே ஆச்சரியம். கிட்டத்தட்ட முப்பது  வருடம்  கழிந்து  நண்பனைப் பார்த்ததில் மனம் மகிழ்ந்து என்ன ஜானகி  எப்படிஇருக்கே என்றார்.தன குடும்பம் சென்னையில் இருப்பதாகவும், தன ஒரே மகள் திருமணம் குறித்து வரன் தேட கும்பகோணம் வந்ததாகவும் சொன்ன ஜானகிராமன், சாரங்கனின் விவரம் கேட்டறிந்தார். எம் எஸ் சி படித்த தன மகளுக்கு கணேஷ் போன்ற வரன் கிடைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்ற அவரிடம் தன மகன் தீபாவளிக்கு வரும்போது பேசி பார்கிறேன் என்றார் சாரங்கன்.

வீடு வந்தவுடன் மனைவியிடம் விஷயத்தை சொல்லி கணேஷுக்கு நல்ல பொருத்தமா இருக்கும் என்று நினைப்பதாக உரைத்தார். என்ன இருந்தா என்ன, கல்யாணம் ஆன கையோட அமெரிக்காவுக்கு பொண்டாட்டியோட போய்டுவான், நாம தனியா தானே இருக்கணும் என்று  கண்ணீர்  விட்ட மனைவியை எப்படி தேற்றுவது என்று குழம்பினார் சாரங்கன். ரெண்டு மாதங்கள் உருண்டோடின. கணேஷ் தீபாவளிக்கு முன் தினமே வந்து சேர்ந்தான். அவனிடம் மெதுவாக திருமணத்தை பற்றி பேசிய சாரங்கனிடம், இதெல்லாம் நீங்கள் பார்த்து என்ன செய்தாலும் எனக்கு ஓகே ! என்றான். ஒரு நிமிடம் தன்னை மறந்து மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப்போன சாரங்கன்,கல்யாணியிடம் சொல்ல விரைந்தார். தீபாவளியை அமர்களமாக கொண்டாடிய சாரங்கன் தன நண்பன் ஜானகிராமன் வீட்டாரை மறுதினம் விருந்துக்கு அழைத்தார். மகள் ஐஸ்வர்யாவுடன் அவர்கள் வந்து ஒரு நாள் முழுவதும் இருந்ததில் எல்லோருக்கும் சந்தோஷம. பெண்ணைப் பார்த்த கணேஷுக்கு மிகவும் திருப்தி என்றவுடன் மற்ற விஷயங்களை பேசி முடித்தார் சாரங்கன். தடபுடலாக நடந்த திருமணத்தில் செல்வந்தரான ஜானகிராமன் ஊரே பிரமிக்கும் வகையில் எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தார். திருமணம்ஆகி ஒரு வாரம் ஆன பிறகு, கணேஷ் தன வேலை விசயமாக ஏற்பாடு செய்து விட்டு வர வெளியே சென்றதும் , கல்யாணி சோகமான முகத்துடன் அவரை பார்த்து, ஏன்னா இன்னும் எத்தனை நாள்லே அமெரிக்காவுக்கு கிளம்பறான்? என்றாள். தெரியல்லியே கேட்டு சொல்லறேன் என்று அரை மனதுடன் கூறிய சாரங்கன் பெரு மூச்சு விட்டார். மாலை ஆறு மணி அளவில், அப்பா என்று அழைத்தவாறே உள்ளே வந்த கணேஷ் அம்மாவைப் பார்த்து, அம்மா எல்லா ஏற்பாடும் பிரமாதமா ஆயிடுத்து. பத்து நாளில் வேலையை ஆரம்பிக்கலாம் என்றான். அப்போ அமெரிக்காவுக்கு எப்போ கிளம்புவதாக உத்தேசம் என்று கேட்ட தாயிடம், கண் சிமிட்டியவாறே, ஏம்மா எப்படா இவன் கிளம்புவான் என்று இருக்கா என்றான்.  பொலபொல  வென்று கண்ணில் நீர் வடிய அழ துவங்கினாள் கல்யாணி. என்னம்மா நான் விளையாட்டாக சொன்னால் இப்படியா என்று பதறிய கணேஷ் தந்தையையும் தாயையும்  ஒன்றாய்  அமர வைத்தான். நீங்கள் நினைப்பது போல  அமெரிக்காவில்   வேலை செய்யப் போவது இல்லை.. இந்த கம்ப்யுட்டர் யுகத்தில்  எங்கே இருந்து கொண்டும் எல்லா வேலையும் செய்ய முடியும். இங்கிருந்தே அமெரிக்காவுக்கு சாப்ட்வேர்  அனுப்பவும்   ஏற்பாடு செய்துவிட்டேன் என்றான் கணேஷ்!. சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போன சாரங்கனும் கல்யாணியும் கணேஷையும் ஐஸ்வர்யாவையும் இறுகப் பிடித்து முத்தமிட்டனர்.

1 Comment:

  1. Shobana said...
    Excellent story capturing the love for ones country as well as the parents. Narrative is just brilliant.

Post a Comment



Related Posts with Thumbnails