Monday, 12 October 2009
வழக்கம் போல் காலை டிபன் ஆனதும் ஆபீசுக்கு கிளம்பினார் வரதன். லக்ஷ்மீ, என்னோட கேஸ் கட்டு எங்கேன்னு பாரேன், காணோம் என்றவரை பார்த்து பொருமினாள் அவர் மனைவி. ஆமாம் தினமும் கோர்ட்டுக்கு போறதுதான் பெரிசா இருக்கு, ஒரு நல்ல வருமானம் உண்டா. நகை நட்டுன்னு வாங்கிக்க முடியறதா, என்ன பொழப்போ என்றாள். மிகவும் நேர்மையாக தொழில் செய்யும் வரதனுக்கு பெரிய வருமானம் இல்லாததில் ஒன்றும் வியப்பில்லை தான். என்ன செய்வது. பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்த உலகில் நேர்மையான கேஸ் மட்டும் தான் நடத்துவேன் என்றால் எப்படி பிழைப்பது. சில பாங்க் வாடிக்கை யாளர்களுக்கு லீகல் அட்வைசராக இருப்பதால் மாதம் தோறும் ஒரு நல்ல தொகை வந்து கொண்டு இருந்தது. எனினும் லக்ஷ்மிக்கு தன கணவர் இப்படி நேர்மை நேர்மை என்று சம்பாதிக்காமல் தன மூளையை வீனடிப்பதாகவே தோன்றியது.
கேஸ் கட்டுகளை கொடுத்த லக்ஷ்மி வாசலில் பெரிய கார் ஒன்று வந்து நிற்பதை கண்டு, ஏன்னா, யாரோ வாடிக்கைகார போல இருக்கு, பாருங்கோ என்றாள். காரிலிருந்து பருமனாய் ஒரு வாலிபன் உள்ளே வந்தான். அய்யா என் பேர் நாராயணன். நான் குடி இருக்கும் வீட்டுக்காரர் என் மீது கேஸ் போட்டிருக்கார். நீங்கள் தான் என் பக்கம் ஞாயம் வாங்கி கொடுக்கணும் என்றான். என்ன கேஸ் என்று விவரமா சொல்லு என்ற வரதனிடம், தான் சென்ற 15 வருடங்களாக அதே வீடடில் குறைந்த வாடகையில் குடி இருப்பதாகவும், அந்த வீடு இருக்கும் ஏரியா அருமையான இடம் என்பதால் அந்த வீட்டை எப்படியும் சொந்தமாக தானே மாற்றி கொள்ள ஆசை படுவதாகவும் சொன்னான். கேஸ் விவரம் பூராவும் படித்து விட்டு பின்னர் சொல்வதாக கூறி அவனை அனுப்பினார். அந்த கேஸ் விவரங்களை கண்டறிய முயன்றதில் வீட்டு சொந்தக்காரர் ஒரு ஆசிரியர் என்றும்,அவரது ஒரே சொத்து அந்த வீடு தான் என்றும் அறிந்தார். அநியாயமாக அந்த வீட்டை பறிக்க நினைக்கும் அந்த வாலிபனை நினைத்து மனம் கொதித்தார். மறுநாள் அவன் மீண்டும் வந்து என்ன முடிவு வரதன் சார் என்று கேட்டதும், நான் உங்கள் கேசை எடுத்துக்கொள்ள இயலாது. நீ செய்வது மிகவும் அநியாயம். அவருடைய ஒரே சொத்தான வீட்டை இழந்தால் அவரால் வாழவே முடியாது என்றார். ஐயா, நீங்கள் ஏன் அதைப்பற்றி வீணாக கவலை படுகிறீர்கள். உங்களுக்கு பீசாக இருபத்தி ஐயாயிரம் ரூபாய் கொடுக்கிறேன். நன்கு வாதாடி வழக்கை ஜெயிப்பதுதான் உங்களுடைய வேலை என்றான் அந்த இளைஞன். இல்லேடாப்பா, நேர்மையான வழக்கைத்தான் நான் எடுத்து நடத்துவேன் என்ற வரதனிடம், ஏளனமாக சிரித்தவாறே நாய் விற்ற காசு கொலைக்காது சாமி என்றான். அதிர்ந்த வரதன், ஆமாம், நாய் விட்ற காசு குலைக்காது தான், ஆனால் அது மிக நாறும்! எனக்கு நாற்றத்தை கண்டால் அருவருப்பு என்று உள்ளே சென்றவரை மிகவும் பெருமையாக பார்த்தாள் லக்ஷ்மீ.பின்னர் அந்த ஆசிரியரிடம் போனில் பேசிய வரதன் அவருடைய கேசை தானே எடுத்துக்கொள்வதாகவும், வென்ற பின் அவரால் முடிந்த பீசைக் கொடுத்தால் போதும் என்றும் சொன்னார். மனம் நெகிழ்ந்த ஆசிரியர், தன குடும்பத்துடன் அவர் வீட்டிற்கு வந்து எல்லாவித விவரங்களையும் அளித்தார். நல்ல ஆதாரங்கள் நேர்மையாக இருந்ததால் மிகவும் எளிதாக கேஸ் முடிந்து ஆசிரியர் பக்கம் தீர்ப்பும் ஆனதும்,ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு , பழத்துடன் ரூபாய் ஐந்தாயிரம் பணமும் இட்டு வரதன் முன் வைத்த ஆசிரியரை நோக்கி புன்முறுவல் பூத்தார் வரதன்.
Labels: Tamil Stories
1 Comment:
-
- sundara raman.k said...
12 December 2009 at 02:32honesty may not get you riches but gives you a lot of satisfaction to lead a wonderful life is revealed by this story by saras who was a personification of integrity and honesty in his official life.