Sunday, 11 October 2009
மகாலிங்க சுவாமி அர்ச்சகர் ராம தீக்ஷிதர் என்றால் கும்பகோணத்தில் இருந்து மாயாவரம் வரை தெரியாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு அவரின் குணமும், பக்தியும், தெய்வ வழிபாடும் பிரசித்தம். பரம்பரையாக ப்ரோஹிதமும், பூஜயுமாகவே இருந்துவரும் எளிய குடும்பம் அவருடையது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் மனைவியை இழந்த அவர் தன ஒரே மகள் பங்கஜத்தை உயிராக நேசித்து வளர்த்ததில் ஆச்சரியம என்ன. காலையில் சூரியன் உதிக்கும் முன்னர் நீராடி கோவிலுக்கு சென்றால் மதியம் உணவுக்கு தான் வீடு வரும் தீக்ஷிதர், வரும் பக்தர்களுக்கு தெய்வம் போல் காட்சி அளித்தார். கோவில் உத்தியோகத்தையே நம்பி வாழும் அவர், பிரமாதமாக ஒன்றும் சேமிக்க இயலாததில் வியப்பென்ன? பங்கஜம் விடு விடு வென்று வளர்ந்து, தேவதை போல் திருமணத்திற்கு தயாராக இருப்பது கண்டு தீக்ஷிதர் கவலைப் படாத நாள் இல்லை. தினசரி ஜீவனத்திற்கு போக மீதி சேமிப்பு என்று ஒரு சிறிய தொகையை வைத்திருக்கும் அவர், திருமண செலவுகளை எப்படி அதில் பூர்த்தி செய்வதென்று மனம் கலங்கினார்.
நாற்பது வருடங்களாக தான் பூஜித்து வரும் ஜோதி மகாலிங்கம் தன்னை கை விட மாட்டார் என்ற அபார நம்பிக்கையில் வாழ்ந்திருந்தார். தினமும் தந்தைக்கு சுவாமி அர்ச்சனைக்காக மலர்களை தொடுத்து கோவிலில் சென்று கொடுப்பாள் பங்கஜம். அபடியே அங்கு சுத்தம் செய்து கோலம் போடுவதும் அவள் தினசரி பணி. மகாலிங்கத்திற்கு பணிவிடை செய்யும் மகளைக்கண்டு பூரித்தார் ராம தீக்ஷிதர்.
நாட்கள் உருண்டோடின. பங்கஜம் இருபத்தி மூன்று வயதை எட்டியதும், தீக்ஷிதர் வயதாகி முன்போல் ஓடி ஆட முடியாமல் சீக்கிரமே களைப்படைய நேர்ந்தது. மனதில் பங்கஜத்தை பற்றிய கவலை விஸ்வ ரூபம் எடுக்க ஆரம்பித்தது. அப்போது அவருடைய ஊர் மணியம் சங்கரையர் அவரிடம் ஒரு நாள். என்ன தீக்ஷிதர் அமெரிக்காவிலே வாஷிங்க்டன் பெருமாள் கோவிலுக்கு ஒரு ஆச்சாரியார் வேணுமாம், போறேளா நல்ல சம்பளம் கிடைக்கும். ஐந்து வருடம் ஒப்பந்தம். பொண்ணுக்கு கல்யாணம் பண்ண ஒரு வழி பிறக்கும் என்றார். ஒரு நிமிடம் மனதிலே தோன்றிய சபலத்தை வென்று, இல்லை மணியம் சார், பர தேசத்தில் போய தான் என் பெண் கல்யாணம் செய்யவேண்டும் என்று மகாலிங்கம் என்னை கை விட மாட்டான். இங்கேயே ஒரு வழி பிறக்கும் என்ற அவரை வினோத மாக பார்த்தார் மணியம்.
ஒரு ஞாயிறன்று காலை பூஜையை முடித்துவிட்டு கற்பூர ஆராதனை தட்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்த தீக்ஷிதரின் காலில் எதோ தட்டியதில் நிலை குலைந்து தடு மாறி விழ இருந்தார். அப்போது ஒரு கை ஆதரவாக அவரை அனைத்தது மட்டும் அல்லாமல் , ஆராதனை தட்டையும் தாங்கியது. திரும்பி நோக்கிய அவர் நெற்றியில் பளீரென்று விபூதியுடன் அழகிய ஆஜானுபாகுவாக ஒரு இளைஞன் நிற்பதை கண்டார். மன்னிக்கவும், கால் தவறிடுத்து என்ற அவரிடம், பரவாயில்லை பெரியவரே என்று புன்னகைத்தான் அந்த இளைஞன். உன் பெயர் என்னப்பா என கேட்டதும், தன பெயர் கணேஷ் என்றும் சென்னையில் தனியார் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்ப்பதாகவும் சொன்னான். கோவில் வேலை முடிந்ததும் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் அய்யா என்றவனிடம் சரி என்று கூறிய தீக்ஷிதர் உள்ளே சென்றார்.
மதியம் எல்லா வேலைகளையும் முடித்த பின்னர் கோவில் வெளியே வந்த அவர் அங்கே அமர்ந்திருந்த அந்த இளைஞனை பார்த்து என்னப்பா , ஏதோ பேச வேண்டும் என்றாயே என்று அமர்ந்தார். அவர் கால்களை ஒற்றி வணக்கம் செய்தவாறே பெரியவரே நான் கோவிலுக்கு வரும் போது இங்கு ஒரு பெண் சுத்தம் செய்வதையும், மலர்களை தொடுத்து அளிப்பதையும் கண்டேன். எனக்கு அவளை மிகவும் பிடித்து இருப்பதால் அவளுடைய தாய் தந்தையரை பார்த்து பேச விரும்பினேன். தாங்கள் தான் அவளது தந்தை என்று அறிந்ததும் உங்களிடம் பேச வந்தேன். எனக்கு தாய் மட்டும் தான், தந்தை சிறு வயதிலேயே தவறி விட்டதால் தாயிடம் வளர்ந்தேன், எம் எஸ் சி படிப்பு என்றவனை கண்கொட்டாமல் பார்த்தார். அப்பா, அவர் காத்துக்கிட்டு இருக்கார் என்று கையை அசைத்தாள் பங்கஜம். கண்ணில் நீர் சொரிய மகாலிங்க சுவாமியின் சன்னதியை நோக்கி கும்பிட்டவராய் , சம்மதம் என்றார் தீக்ஷிதர்.
Labels: Tamil Stories
lord krishna states ananya chinthayanthomam yejana paryupasathe tesham nithyabi yuktanam yoga kshemam vahamyaham i look after the welfare of one who is constantly thinking of me-
this story is aproof for lord's kindness