Sunday, 18 October 2009
கம்ப்யுட்டர் யுகத்தில் கால் சென்டர்களுக்கு மவுசு வந்தாலும் வந்தது இளம் பெண்களும் இளைஞர்களும் போட்டி போட்டுக்கொண்டு படிக்க ஆரம்பித்ததில் வியப்பில்லை. ஆனால் இந்த வேலையின் இரவு பகலென்று பார்க்காத ஒரு வேலை நியமம் பலர் வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டு பண்ண ஆரம்பித்தது. கல்யாணம் ஆனவர்கள் மட்டும் அல்லாமல் இளம் ப்ராயத்தினரையும் இது வெகுவாக பாதித்தது. நாள் முழுவதும் வேலை செய்த பின் களைத்து வரும் போது போதிய தூக்கமோ அல்லது ஓய்வோ கிடைக்காமல் உடல் நலம் பாதிப்பது ஒரு புறம். உடனேயே தூங்கிவிட்டு பின்னர் திரும்பவும் இரவு வேலைக்கு செல்வதால் மனதுக்கு ஒரு இளைப்பாற்றல் இன்மையால் வரும் மன இறுக்கம், மற்றும் சோர்வு நாளடைவில் விரக்தியாக மாறுவதுதான் அபாயம். இந்த தருணத்தில் தான் பலர் தடம் புரண்டு வேண்டாத வழிகளில் போவதும், தகாத பழக்க வழக்கங்களுக்கு ஆளாகுவதும் நேருகிறது. எல்லோருமே இப்படித்தான் என்றும் கூறிவிட முடியாது. ஒரு சிலர் நல்ல மனோ திடம் கொண்டு தங்கள் வாழ்கை வழி முறைகளை நன்றாய தன துணையுடன் கலந்து ஆலோசித்து ஒரு விதி முறையை ஏற்படுத்திக்கொண்டு வேலைகளை பகிர்ந்து கொண்டு இருந்தால் பிரச்சினைகள் இருப்பதில்லை. ஆனால் இத்தகைய மனப்பான்மை உடையவர்கள் நூற்றுக்கு பத்து சதவீதம் மட்டுமே என்பதுதான் கவலை தரும் விஷயம். தாம்பத்யம் என்பது ஒரு சுவையான நீண்ட கால ஒப்பந்தம். இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் புரிந்த கொள்வது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் ஓருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதும்! ஒரு குழந்தை பிறந்துவிட்டால் நிலைமை இன்னும் கடினமாகிவிடும். இரவு வேளைகளில் பணிக்கு சென்று விட்டு வரும்போது வழியில் நிகழும் ஒரு சில வன்முறைகள், தினசரியில் நாள்தொறும் வருவது, இன்னும் கவலை அளிக்கும் விஷயம். ஆகவே, நல்ல மனக்கட்டுப்பாடும், கூட்டுககுடும்பம் அல்லது பெரிய உறவினர்களின் அருகாமையில் இருக்கும் வசதியும் இருந்தால் மட்டுமே இம்மாதிரி வேலைகளை மேற்கொள்வது உசிதமானது. என்னைக் கேட்டால் பெண்கள் இம்மாதிரி வேலைகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது என்பேன். பெண்கள் பலவீனமானவர்கள் என்பதால் அல்ல, பெண்கள் மென்மையானவர்கள், மற்றும் அமூல்யமானவர்கள் என்பதால்
Labels: Trivia