Friday, 30 October 2009

It is true that the Soaps aired on TV are fictions. Still there must be a limit for portraying the villainous charatcters in a macabre way. Oflate in Tamil TV the serial programmes aired contain so much violence, brutal killings and show scant respect for the Police Force by blatantly displaying acts of bribery and being in cahoots with criminals. At times the criminal ideas enacted are so original that I shudder to think what will happen if the criminals start using them in real life. This is because the serials show their characters doing these things with such impunity and also getting away with it. There should be stricter norms for permitting violence in TV's as this is a very Powerful Visual Media which makes a strong impact on the viewers, especially the younger audience in their formative years. Through this Blog I am appealing to all the illustrious TV Serial producers to PLEASE have a re-look at their unreleased episodes and do a litle moderation required, keeping in mind their own kids. Our small screen as well as Big Screen producers are so Talented and Brilliant film makers that I am sure they can dish out better product than these sickening, macabre and un wanted filth into our drawing rooms. Iam not saying this happens only in Tamil TV and may well be the scenerio in others as well. I am pointing out because I want to rectify my house before attempting to reform the world. I request the concerned to take this as an appeal for some consideration rather than an accusation or criticism.

Wednesday, 28 October 2009

Truth

I can imagine the  reaction of most of the viewers when they see this title! How often have you said the Truth in situations when it would have been convenient not to say it. I had been shifting from one job to another rather frequently and I was once asked , "Why I changed so many Jobs?". The convenient answer could have been looking for better prospects, job satisfaction etc. Instead  I chose to say the truth that I did not have enough work to match my Salary. It really jolted my interviewer. He recovered quickly and  continued with the Interview. Needless to say that he looked a bit disturbed. His next question was, how would I react if I were to be posted in a Loss Making Unit of the Organisation.(I am a Qualified Accountant). I looked him in the eye and said that if the Unit was making Loss because of the wrong choice of product or wrong people heading the Unit then only God could help him. However if it was making Loss due to faulty systems, wrong financial decisions etc then I could help the Unit to turnaround. I did get the Job and the Unit turned around so well that It established a record of reaching the financial / commercial  targets for 48 months continuously without a break. Another instance that comes to my mind is a negotiation with a major supplier of our organisation. As usual he insisted that the rates quoted by him were final and that he could not reduce them further. We badly needed the goods and he was indeed a quality supplier. However since our final product did not have sufficient margin to afford this material cost we were in a fix.  I asked the supplier as to what is the margin that he would like to have on his sale and to produce the cost details for the material he supplied. I agreed to protect his margin over and above the "Truthful Cost". Believe it or not, the price dropped by a whopping 5% and we could accomodate the cost within our product. It is the fear of protecting the margin that makes us act greedily at times and a little bit of truth about our "Real wants and Needs" could solve the problem. Are we ready?

Wednesday, 21 October 2009

My Dad

Tender and small was I, holding his hand
Groping wildly for his smiling face
Spoke my first word unlike the rest
yes, it was ppa...and not ..mma...
It sent him spinning with delight
Boasting that I was Papa's girl
Times when I tried to turn on my belly
Felt his hands cover my face, lest I hurt
Cry I did when I felt hungry but
Moist would get his eyes with tears
Tripping and falling I learnt to walk
With him along attending to the shock
Nothing but the best would he choose for me
Because I am his most precious find
Day or night it never really mattered
He just got me whatever  I wanted
Yes,  I chose my Prince Charming out of blue
Summoned my dad and told him  to do
Anything he wants but get me the dude
More often than not, I wonder what is it
That bonds him ever so much with me
I have no answer but this much I can say
I would always want him as my Dad , I Pray

Monday, 19 October 2009

நம் வாழ்க்கையில் மிக முக்யமான ஒரு அங்கம் வகிக்கும் பிணைப்பு நட்பு தான் என்றால் அது மிகையாகாது. மனைவீ, மக்கள், தாய், தந்தை என பல உறவுகளுடன் வாழும் நமக்கு ஒரு குளிர் தென்றல் போல அமைவது நட்பு தான். நான் பல முறை பிரச்சினைகளில் சிக்கியபோதெல்லாம் தீர்வுக்கு நாடிய ஒரு உறவு நட்பு தான். ஒருஎதிர்பார்ப்பே இல்லாமல் நேசக்கரம் நீட்டும் நட்பு கடவுள் நமக்கு அளித்த ஒரு வரம் என்று கூட சொல்லலாம் .பள்ளிப்பருவத்தில் இருந்து வாழ்வின் கடைக்காலம் வரை துணை வருவதும் நட்பு தான். இத்தகைய நட்பை தேர்ந்து அறிவதும்,தொடர்ந்து வளர்ப்பதும் மிக அவசியம். நல்ல நட்பின் உன்னத அடையாளங்களில், ஓருவருக்கொருவர் எதிர்பார்ப்பின்றி உதவுவது, ஒருவர் சுக துக்கங்களில் அழைப்பை எதிர்பாராமல் கலந்து கொள்வது, மற்றும் ஒருவர் இடையூறுகளில் உடன் சென்று உதவுவது போன்றவை அடங்கும். தவறு செய்யும்போது சுட்டிக்காட்டி திருத்துவதும் நல்ல நட்புக்கோர் அடையாளம். அலுவலக நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவுவது பெரிய விஷயம் இல்லை என்றாலும் எனக்கு வாய்த்த ஒரு நண்பரின் தன்னலமற்ற அன்பினை என்னால் மறக்க இயலாது. ஒரு சமயம் என் மகளுக்கு உதவும் பொருட்டு என் மனைவி அமெரிக்காவிற்கு ஒன்பது மாதங்கள் செல்ல நேர்ந்தது. எனக்கு தனியாக இருந்தோ, சமையல் வேலையோ செய்து பழக்கமில்லை. ஹோட்டல் சாப்பாடு ஒன்பது மாதங்களில் என் உடம்பில் தோற்றுவிக்கும் மாற்றங்களை நினைத்துக்கூட என்னால் பார்க்க முடியவில்லை. அப்போது, தனியாக வசித்து வந்த என் அலுவலக நண்பர் என் கூட இருந்து சமையல் செய்வது தவிர என்னை ஒரு சிறு குழந்தையை போல் கவனித்துக்கொண்டது [என் வயது 58 மற்றும் உயர் ரத்த அழுத்தம்] என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அவரது தினசரி பூஜையும், நல்ல பழக்க வழக்கமும் அந்த ஒன்பது மாதங்களில் என்னுள் ஒரு புதிய மாற்றத்தையே உண்டாக்கியது. இதுதான் நட்பின் விசேஷமோ!

Sunday, 18 October 2009

கம்ப்யுட்டர் யுகத்தில் கால் சென்டர்களுக்கு மவுசு வந்தாலும் வந்தது இளம் பெண்களும் இளைஞர்களும் போட்டி போட்டுக்கொண்டு படிக்க ஆரம்பித்ததில் வியப்பில்லை. ஆனால் இந்த வேலையின் இரவு பகலென்று பார்க்காத ஒரு வேலை நியமம் பலர் வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டு பண்ண ஆரம்பித்தது. கல்யாணம் ஆனவர்கள் மட்டும் அல்லாமல் இளம் ப்ராயத்தினரையும் இது வெகுவாக பாதித்தது. நாள் முழுவதும் வேலை செய்த பின் களைத்து வரும் போது போதிய தூக்கமோ அல்லது ஓய்வோ கிடைக்காமல் உடல் நலம் பாதிப்பது ஒரு புறம். உடனேயே தூங்கிவிட்டு பின்னர் திரும்பவும் இரவு வேலைக்கு செல்வதால் மனதுக்கு ஒரு இளைப்பாற்றல் இன்மையால் வரும் மன இறுக்கம், மற்றும் சோர்வு நாளடைவில் விரக்தியாக மாறுவதுதான் அபாயம். இந்த தருணத்தில் தான் பலர் தடம் புரண்டு வேண்டாத வழிகளில் போவதும், தகாத பழக்க வழக்கங்களுக்கு ஆளாகுவதும் நேருகிறது. எல்லோருமே இப்படித்தான் என்றும் கூறிவிட முடியாது. ஒரு சிலர் நல்ல மனோ திடம் கொண்டு தங்கள் வாழ்கை வழி முறைகளை நன்றாய தன துணையுடன் கலந்து ஆலோசித்து ஒரு விதி முறையை ஏற்படுத்திக்கொண்டு வேலைகளை பகிர்ந்து கொண்டு இருந்தால் பிரச்சினைகள் இருப்பதில்லை. ஆனால் இத்தகைய மனப்பான்மை உடையவர்கள் நூற்றுக்கு பத்து சதவீதம் மட்டுமே என்பதுதான் கவலை தரும் விஷயம். தாம்பத்யம் என்பது ஒரு சுவையான நீண்ட கால ஒப்பந்தம். இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் புரிந்த கொள்வது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் ஓருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதும்! ஒரு குழந்தை பிறந்துவிட்டால் நிலைமை இன்னும் கடினமாகிவிடும். இரவு வேளைகளில் பணிக்கு சென்று விட்டு   வரும்போது வழியில் நிகழும் ஒரு சில வன்முறைகள், தினசரியில் நாள்தொறும் வருவது, இன்னும் கவலை அளிக்கும் விஷயம். ஆகவே, நல்ல மனக்கட்டுப்பாடும், கூட்டுககுடும்பம் அல்லது பெரிய உறவினர்களின் அருகாமையில் இருக்கும் வசதியும் இருந்தால் மட்டுமே இம்மாதிரி வேலைகளை மேற்கொள்வது  உசிதமானது. என்னைக் கேட்டால் பெண்கள் இம்மாதிரி வேலைகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது என்பேன்.  பெண்கள் பலவீனமானவர்கள் என்பதால் அல்ல, பெண்கள் மென்மையானவர்கள், மற்றும் அமூல்யமானவர்கள் என்பதால்


அமெரிக்க வாழ்க்கையிலே ஒரு பார்வையை காட்டும் தரமான தமிழ் திரைப்படம். ஒரு சிறிய குடும்பம் எப்படி தன்னுடைய அஜாக்ருதையினால் பாலியல் வன்முறை செய்யும் ஒருவனின் பிடியில் சிக்குகிறது என்பதுதான் கதை. சற்றும் விகார மில்லாமல் காட்சிகளை அமைத்திருக்கும் விதமும், முக்ய கதா பாத்திரங்களின் நடிப்பும் மிக அருமை.  பல நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த மகிழ்வு தரக்கூடிய படம்.

Monday, 12 October 2009

வழக்கம் போல் காலை டிபன் ஆனதும் ஆபீசுக்கு கிளம்பினார் வரதன். லக்ஷ்மீ, என்னோட கேஸ் கட்டு எங்கேன்னு பாரேன், காணோம் என்றவரை பார்த்து பொருமினாள் அவர் மனைவி. ஆமாம் தினமும் கோர்ட்டுக்கு போறதுதான் பெரிசா இருக்கு, ஒரு நல்ல வருமானம் உண்டா. நகை நட்டுன்னு வாங்கிக்க முடியறதா, என்ன பொழப்போ என்றாள். மிகவும் நேர்மையாக தொழில் செய்யும் வரதனுக்கு பெரிய வருமானம் இல்லாததில் ஒன்றும் வியப்பில்லை தான். என்ன செய்வது. பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்த உலகில் நேர்மையான கேஸ் மட்டும் தான் நடத்துவேன் என்றால் எப்படி பிழைப்பது. சில பாங்க் வாடிக்கை யாளர்களுக்கு லீகல் அட்வைசராக இருப்பதால் மாதம் தோறும் ஒரு நல்ல தொகை வந்து கொண்டு இருந்தது. எனினும் லக்ஷ்மிக்கு  தன கணவர் இப்படி நேர்மை நேர்மை என்று சம்பாதிக்காமல் தன மூளையை வீனடிப்பதாகவே தோன்றியது.
கேஸ் கட்டுகளை கொடுத்த லக்ஷ்மி வாசலில் பெரிய கார் ஒன்று வந்து நிற்பதை கண்டு, ஏன்னா, யாரோ வாடிக்கைகார  போல இருக்கு, பாருங்கோ என்றாள். காரிலிருந்து பருமனாய் ஒரு வாலிபன் உள்ளே  வந்தான். அய்யா என் பேர் நாராயணன். நான் குடி இருக்கும் வீட்டுக்காரர் என் மீது கேஸ் போட்டிருக்கார். நீங்கள் தான் என் பக்கம் ஞாயம் வாங்கி கொடுக்கணும் என்றான். என்ன கேஸ் என்று விவரமா சொல்லு என்ற வரதனிடம், தான் சென்ற 15 வருடங்களாக அதே வீடடில் குறைந்த வாடகையில் குடி இருப்பதாகவும், அந்த வீடு இருக்கும் ஏரியா அருமையான  இடம்  என்பதால்  அந்த வீட்டை எப்படியும்  சொந்தமாக தானே மாற்றி கொள்ள   ஆசை படுவதாகவும்  சொன்னான். கேஸ் விவரம்  பூராவும்  படித்து  விட்டு பின்னர்  சொல்வதாக கூறி அவனை அனுப்பினார். அந்த கேஸ் விவரங்களை கண்டறிய முயன்றதில் வீட்டு சொந்தக்காரர் ஒரு ஆசிரியர் என்றும்,அவரது ஒரே சொத்து அந்த வீடு தான் என்றும் அறிந்தார். அநியாயமாக அந்த வீட்டை பறிக்க நினைக்கும் அந்த வாலிபனை நினைத்து மனம் கொதித்தார். மறுநாள் அவன் மீண்டும் வந்து என்ன முடிவு வரதன் சார் என்று கேட்டதும், நான் உங்கள் கேசை எடுத்துக்கொள்ள இயலாது. நீ செய்வது மிகவும் அநியாயம். அவருடைய ஒரே சொத்தான வீட்டை இழந்தால் அவரால் வாழவே முடியாது   என்றார். ஐயா, நீங்கள் ஏன் அதைப்பற்றி வீணாக கவலை படுகிறீர்கள். உங்களுக்கு பீசாக இருபத்தி ஐயாயிரம் ரூபாய் கொடுக்கிறேன். நன்கு வாதாடி  வழக்கை ஜெயிப்பதுதான் உங்களுடைய  வேலை என்றான் அந்த இளைஞன். இல்லேடாப்பா, நேர்மையான வழக்கைத்தான் நான் எடுத்து நடத்துவேன் என்ற வரதனிடம், ஏளனமாக சிரித்தவாறே நாய் விற்ற காசு கொலைக்காது சாமி என்றான். அதிர்ந்த வரதன், ஆமாம், நாய் விட்ற காசு குலைக்காது தான், ஆனால் அது மிக  நாறும்! எனக்கு நாற்றத்தை கண்டால்  அருவருப்பு என்று   உள்ளே சென்றவரை  மிகவும்   பெருமையாக   பார்த்தாள் லக்ஷ்மீ.பின்னர் அந்த ஆசிரியரிடம் போனில் பேசிய வரதன் அவருடைய கேசை தானே எடுத்துக்கொள்வதாகவும், வென்ற பின் அவரால் முடிந்த பீசைக் கொடுத்தால் போதும் என்றும் சொன்னார். மனம் நெகிழ்ந்த ஆசிரியர், தன குடும்பத்துடன் அவர்  வீட்டிற்கு வந்து  எல்லாவித   விவரங்களையும்  அளித்தார். நல்ல   ஆதாரங்கள் நேர்மையாக இருந்ததால் மிகவும்  எளிதாக கேஸ் முடிந்து ஆசிரியர் பக்கம் தீர்ப்பும் ஆனதும்,ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு , பழத்துடன் ரூபாய் ஐந்தாயிரம் பணமும் இட்டு வரதன் முன் வைத்த ஆசிரியரை  நோக்கி  புன்முறுவல்  பூத்தார் வரதன்.

அன்று ராஜேஷுக்கு பிடித்த பாகற்காய் பிட்லே செய்து விட்டு அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் ரேவதி. திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகியும் கூட்டுக் குடும்பம் என்பதால் அதிகம் வெளி வாசல் என்று செல்வதற்கு இயலாத ஒரு சூழ்நிலை. அதில் சற்று வருத்தம் என்றாலும், ராஜேஷின் மிக நல்ல குணமும், அவளிடம் அவன் வைத்திருந்த  ஒரு அபரிமிதமான பாசமும் அந்த ஏக்கத்தை கொஞ்சம் தீர்த்தது. தனியார் கம்பெனியில் பெரிய ஜெனெரல் மனேஜராக பணி புரியும்  ராஜேஷுக்கு கை நிறைய சம்பளம் மற்றும் கார், வீடு, டெலிபோன் என்று எல்லா சொவ்கரியமும் கிடைத்ததால் வாழ்க்கை சுகமாகத்தான் இருந்தது. மாமனார் மாமியார் சற்று ஆச்சாரமாக இருப்பவர்கள் என்பதால் சமையல் அறையும் பூஜை அறையும் மிக சுத்தமாக இருக்க வேண்டும்.
தினம் சமையல் முடித்து மாமனார் மாமியாருக்கு பத்து மணிக்கு உணவு அளித்துவிட்டு சற்று ஒய்வு எடுப்பது ரேவதியின் வழக்கம். மாடர்னாக வளர்ந்த பெண் காலையில் டிபனும் மதியம் பனிரெண்டு மணிக்கு மேல் உணவும் சாப்பிட்டு பழகியதால் காலை உணவு இல்லை. சிறு வயதிலேயே காண்வென்டில் படித்ததால் பூஜை புனஸ்காரங்கள் அதிகம் ஈடுபாடு இல்லை. ரேவதியின் மாமியாருக்கு தன மருமகள் பூஜை செய்யாததும், நேரத்தில் சாப்பிடாமல் மதியம் வரை இருப்பதும் பிடிக்கவில்லை. மாலை ராஜேஷ் வீடு வந்ததும், எங்களை சற்று பெருமாள் கோவிலுக்கு கார்லே கூட்டிண்டு போறயா. வீட்டுலே ஒரு ஸ்லோகம், பூஜை ஒன்னும் இல்லாம வெறிச்சுனு இருக்குடா என்றாள் மாமியார். ரேவதியின் முகம் வாடிப் போனதை கண்ட ராஜேஷ், இதோ குளிச்சுட்டு வரேன் போகலாம் என்று குளியலறைக்கு சென்றான். போகும் வழியில் தன ஆபீஸ் பையில் இருந்து ரெண்டு முழம் மல்லி பூவும், படிக்க ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தகம் இரண்டையும் ரேவதி கையில் கொடுத்தான். கோவிலில் இருந்து திரும்பிய ராஜேஷ் அவனுக்கு மிகவும் பிடித்த பாகற்காய் பிட்லேயின்  ருசியில் மனம் மகிழுந்து, அது எப்படி நீ பண்ணற பிட்லே மட்டும் இவ்வளவு நல்லா இருக்கு என்றான். கண்ணில் பொங்கிய நீரை மறைத்தவாறே, ஆமாம் எனக்கு சமைக்கதானே தெரியும் ஸ்லோகமும் பூஜையுமா பண்ண தெரியும் என்றாள். பழங்கால மனிஷி அம்மா, பூஜையே வாழ்க்கைனு வளந்தவ, அதான் அப்படி சொல்லறா. அதை பெரிசா எடுத்துக்காதே. உன்னுடைய அருமை தெரிஞ்ச நான் இருக்கேன். கவலை படாதே என்ற ராஜேஷிடம் ஒன்றிப்போனாள் ரேவதி. சொல்லமறந்திட்டேனே, எனக்கு வாஷிங்க்டன்லே ரெண்டு மாசம் மார்கடிங் டூர் அனுப்புகிறார்கள். மனைவியையும் அழைத்துப்போக அனுமதி கிடைத்து விட்டது! சந்தோஷமா என்றான். என்னங்க, மாமனார் மாமியாரை தனியா விட முடியாது என்று தானே நாம இன்னும் ஹனிமூன் கூட போகாம இருக்கோம். ரெண்டு மாசம் உங்க கூட நான் எப்படி வரது. என்றாள் ரேவதி. அந்த கவலை உனக்கு வேண்டாம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவங்க வெகு நாளா ஆசைப்பட்ட காசி ராமேஸ்வரம் மற்றும் ஹரித்வார் ரிஷிகேஷ் ட்ரிப் பாகேஜ் டூர்லே ஏற்பாடு பண்ணிட்டேன். சரியா ரெண்டு மாசம் ட்ரிப். நாம் திரும்பி வந்தப்புறம் தான் அவங்க வருவாங்க. என்ன திருப்தியா என்றவனை அணைத்துக்கொண்டு, என் புருஷன் தான் ஒசத்தி என்று சின்ன குழந்தையைப் போல் சிரித்தாள் ரேவதி. .   .

ஊரிலேயே சற்று வசதியான குடும்பம் என்று சொல்லத் தக்கது மணி ஐயரின் வீடு. தன மனைவி கல்யாணியுடன் அந்த பெரிய வீடடில் தனியாக வாசம் செய்து வந்த அந்த தம்பதியருக்கு குழந்தைகள் இல்லாதது ஒரு பெரிய  குறைதான்.  உள்ளூர் மணியமாக இருந்த மணி ஐயருக்கு நில புலன்கள் ஏராளம்.அவரது தம்பிக்கு நான்கு ஆண் குழந்தைகள் இருந்ததால் ஒரு பிள்ளையை தான் தத்து எடுத்து வளர்க்கும் எண்ணம் அவர் மனதில் தோன்றியதில் ஆச்சரியம இல்லை. தன மனைவி கல்யாணியிடம் அது பற்றி பேசும்போது அதில் சுவாரசியம் காட்டாதது கண்டு விட்டு விட்டார். பெரிய மணியம் என்பதால் அவர் வீடடில் எப்போதும் பணி ஆட்கள் புடை சூழ கல கல வென்று இருக்கும். ஒரு பொங்கல் அன்று அவர் நிலத்தை பார்த்துக்கொள்ளும் முனியன் அதில் விளைந்த அரிசி, வாழை, கரும்பு மற்றும் இதர சாமான்களை வண்டி நிறைய வீடடில் கொண்டு வந்து கொடுத்தான். அவன் கூடவே சுட்டியாக துரு துரு என்று ஒரு சின்னம் சிறிய பெண் வருவதை கண்ட கல்யாணிக்கு அந்த குழந்தை யிடம் பேச வேண்டும் போல் தோன்றியது. ஏய் பாப்பா, இங்கே வாயேன் என்று அழைத்தாள். என்ன மாமி கூப்டீங்களா என்றவாறே ஓடி வந்தவளை தன மடியில் அமர்த்திக்கொண்டாள். உன் பெயர் என்னம்மா என்று கேட்டதும் என் பெயர் மீனாக்ஷி மாமி என்றாள் அந்த சிறுமி. ஆகா! பெரிய அழகிய விழியுடன் இருந்த அச் சிறுமிக்கு எத்தனை பொருத்தமான ஒரு பெயர் என்று வியந்தாள் கல்யாணி.பள்ளிக்கூடம் போவதாகவும், ஒண்ணாம் க்ளாஸ் என்றும் பட பட வென்று பேசிய அவளையே பார்த்து கொண்டிருந்த கல்யாணியை என்ன குட்டி ஒன்னையும் மயக்கிட்டாளா என்ற மணி ஐயரின் குரல் சுய நினைவுக்கு வர வைத்தது. ஆமான்னா! எத்தன அழகா இருக்கா, எப்படி பேசறா பாருங்கோ.ரொம்ப புத்திசாலியா வருவா போல இருக்கு இல்லே என்றாள். நம்ம முனிய்னோட ஒரே பொண்ணு, தாயில்லாத கொழந்தை, அதான் அவனோடயே சுத்திண்டு இருக்கா என்றார் மணி ஐயர். கண்ணில் நீர் துளிர் விட நின்ற கல்யாணியை பார்த்து, என்ன கொழந்தைய நீ தத்து எடுத்துக் கலாம்னு நினைக்கிறாயா என்று கேட்டார். என்ன பேச்சு பேசறேள், தாயையும் இழந்துட்டு அப்பாவோட சுத்தி வளைய வர கொழந்தைய அந்த தந்தை யையும் விட்டு பிரிக்க சொள்ளறேளா மகா பாவம்ணா. நான் நினைச்சது வேற என்றாள். சரி, என்ன நினைச்சே சொல்லேன் என்றார் மணி ஐயர். இத்தனை சாமர்த்தியமான குழந்தையை நல்லா பராமரிக்கவோ அல்லது நன்றாக படிக்க வைக்கவோ முனியனுக்கு வசதி இல்லை.நமக்கோ எல்லா வசதிகள் இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லை.  நாம்  ஏன இந்த குழந்தையின் படிப்புக்காகவும், பராமரிப்புக்காகவும் ஆகும் செலவை  ஏத்துக்க கூடாது? அப்பப்ப நம்ம வீட்டுக்கு வந்து இருந்துட்டு போகட்டுமே.என்ன நான் சொல்லறது என்றாள் கல்யாணி. எத்தனை பெரிய மனசுடி ஒனக்கு, சுய நலமில்லாமே ஒரு காரியம். இப்போதே நான் ஏற்பாடு செய்கிறேன் என்று புறப்பட்டார் மணி ஐயர்.

Sunday, 11 October 2009

மகாலிங்க சுவாமி அர்ச்சகர் ராம தீக்ஷிதர் என்றால் கும்பகோணத்தில் இருந்து மாயாவரம் வரை தெரியாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு அவரின் குணமும், பக்தியும், தெய்வ வழிபாடும் பிரசித்தம். பரம்பரையாக ப்ரோஹிதமும், பூஜயுமாகவே இருந்துவரும் எளிய குடும்பம் அவருடையது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் மனைவியை இழந்த அவர் தன ஒரே மகள் பங்கஜத்தை உயிராக நேசித்து வளர்த்ததில் ஆச்சரியம என்ன. காலையில் சூரியன் உதிக்கும் முன்னர் நீராடி கோவிலுக்கு  சென்றால் மதியம் உணவுக்கு தான் வீடு வரும் தீக்ஷிதர், வரும் பக்தர்களுக்கு தெய்வம் போல் காட்சி அளித்தார். கோவில் உத்தியோகத்தையே நம்பி வாழும் அவர், பிரமாதமாக ஒன்றும் சேமிக்க இயலாததில் வியப்பென்ன? பங்கஜம் விடு விடு வென்று வளர்ந்து, தேவதை போல் திருமணத்திற்கு தயாராக இருப்பது கண்டு தீக்ஷிதர் கவலைப் படாத நாள் இல்லை. தினசரி ஜீவனத்திற்கு போக மீதி சேமிப்பு என்று ஒரு சிறிய தொகையை வைத்திருக்கும் அவர், திருமண செலவுகளை எப்படி அதில் பூர்த்தி செய்வதென்று மனம் கலங்கினார்.
நாற்பது வருடங்களாக தான் பூஜித்து வரும் ஜோதி மகாலிங்கம் தன்னை கை விட மாட்டார் என்ற அபார நம்பிக்கையில் வாழ்ந்திருந்தார். தினமும் தந்தைக்கு சுவாமி அர்ச்சனைக்காக மலர்களை தொடுத்து கோவிலில் சென்று கொடுப்பாள் பங்கஜம். அபடியே அங்கு சுத்தம் செய்து கோலம் போடுவதும் அவள் தினசரி பணி. மகாலிங்கத்திற்கு பணிவிடை செய்யும் மகளைக்கண்டு பூரித்தார் ராம தீக்ஷிதர்.
நாட்கள் உருண்டோடின. பங்கஜம் இருபத்தி மூன்று வயதை எட்டியதும், தீக்ஷிதர் வயதாகி முன்போல் ஓடி ஆட முடியாமல் சீக்கிரமே களைப்படைய நேர்ந்தது. மனதில் பங்கஜத்தை பற்றிய கவலை விஸ்வ ரூபம் எடுக்க ஆரம்பித்தது. அப்போது அவருடைய ஊர் மணியம் சங்கரையர் அவரிடம் ஒரு நாள். என்ன தீக்ஷிதர் அமெரிக்காவிலே வாஷிங்க்டன் பெருமாள் கோவிலுக்கு ஒரு ஆச்சாரியார் வேணுமாம், போறேளா நல்ல சம்பளம் கிடைக்கும். ஐந்து வருடம் ஒப்பந்தம். பொண்ணுக்கு கல்யாணம் பண்ண ஒரு வழி பிறக்கும் என்றார். ஒரு நிமிடம் மனதிலே  தோன்றிய சபலத்தை வென்று, இல்லை மணியம் சார், பர தேசத்தில் போய தான் என் பெண் கல்யாணம் செய்யவேண்டும் என்று மகாலிங்கம் என்னை கை விட மாட்டான். இங்கேயே ஒரு வழி பிறக்கும் என்ற அவரை வினோத மாக பார்த்தார் மணியம்.
ஒரு ஞாயிறன்று காலை பூஜையை முடித்துவிட்டு கற்பூர ஆராதனை தட்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்த தீக்ஷிதரின் காலில் எதோ தட்டியதில் நிலை குலைந்து தடு மாறி விழ இருந்தார். அப்போது ஒரு கை ஆதரவாக அவரை அனைத்தது மட்டும் அல்லாமல் , ஆராதனை தட்டையும் தாங்கியது. திரும்பி நோக்கிய அவர் நெற்றியில் பளீரென்று விபூதியுடன் அழகிய ஆஜானுபாகுவாக ஒரு இளைஞன் நிற்பதை கண்டார். மன்னிக்கவும், கால் தவறிடுத்து என்ற அவரிடம், பரவாயில்லை பெரியவரே என்று புன்னகைத்தான் அந்த இளைஞன். உன் பெயர் என்னப்பா என கேட்டதும், தன பெயர் கணேஷ் என்றும் சென்னையில் தனியார் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்ப்பதாகவும் சொன்னான். கோவில் வேலை முடிந்ததும் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் அய்யா என்றவனிடம் சரி என்று கூறிய தீக்ஷிதர் உள்ளே சென்றார்.
மதியம் எல்லா வேலைகளையும் முடித்த பின்னர் கோவில் வெளியே வந்த அவர் அங்கே அமர்ந்திருந்த அந்த இளைஞனை பார்த்து என்னப்பா , ஏதோ பேச வேண்டும் என்றாயே என்று அமர்ந்தார். அவர் கால்களை ஒற்றி வணக்கம் செய்தவாறே பெரியவரே நான் கோவிலுக்கு வரும் போது இங்கு ஒரு பெண் சுத்தம் செய்வதையும், மலர்களை தொடுத்து அளிப்பதையும் கண்டேன். எனக்கு அவளை மிகவும் பிடித்து இருப்பதால் அவளுடைய தாய் தந்தையரை பார்த்து பேச விரும்பினேன். தாங்கள் தான் அவளது தந்தை என்று அறிந்ததும் உங்களிடம் பேச வந்தேன். எனக்கு தாய் மட்டும் தான், தந்தை சிறு வயதிலேயே தவறி விட்டதால் தாயிடம் வளர்ந்தேன், எம் எஸ் சி படிப்பு என்றவனை கண்கொட்டாமல் பார்த்தார். அப்பா, அவர் காத்துக்கிட்டு இருக்கார் என்று கையை அசைத்தாள் பங்கஜம். கண்ணில் நீர் சொரிய மகாலிங்க சுவாமியின் சன்னதியை நோக்கி கும்பிட்டவராய் , சம்மதம் என்றார் தீக்ஷிதர்.

Saturday, 10 October 2009

Deepavali

சாரங்கன் கும்பகோணத்தில் கணக்கு வாத்தியாராக ஒரு சிறு பள்ளியில் வேலை  பார்த்து வந்தார் தன ஒரே மகன் கணேஷ் நன்றாக படித்து பள்ளியில் முதல மாணவனாக தேர்வு பெற்றதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி.பின்னர் ஓராண்டு  காலேஜ் பின் ஐ ஐ டி சென்னையில் கம்ப்யுட்டர் சயின்ஸ் பயின்று அதிலும் முதல ராங்கில் தேர்ச்சி பெற்றான். படிப்பு முழுவதும் ச்காலர்ஷிப்பிலேயே செய்ததால் சாரங்கனுக்கு செலவு வைக்க வில்லை. பின்னர் தான் அமெரிக்கா சென்று மேல்படிப்பு படிக்க விரும்புவதாகவும் அதற்கும் அந்த யுனிவர்சிடியே எயடு கொடுப்பதாகவும் சொன்னவுடன் சாரங்கனால் மறுப்பு சொல்ல இயலவில்லை.

இரண்டு  ஆண்டுகளில்   எம்எஸ் படிப்பும் முடிந்து. அமெரிக்காவில மிக பிரபலமான ஒரு  சாப்ட்வேர்   கம்பெனியிலேயே    ஆராய்ச்சி  பிரிவில்  வேலை  வாய்ப்பு கிடைத்ததாக கணேஷ் எழுதியதை பார்த்த சாரங்கன் தன மனைவியிடம் கூறினார். ஏம்மா கல்யாணி, நம்ம குழந்தை கடைசி காலத்திலே நம்ம கூட இருக்க மாட்டான் போலே தோன்றதே என்று அங்கலாய்தவரிடம் என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தாள் கல்யாணி.

எப்படியும் தீபாவளிக்கு வருகிறேன் என்று கணேஷ் சொன்னதில் சற்று மகிழ்ந்த சாரங்கன் ரெண்டு மாதத்தில் வரும் தீபாவளியை எதிர் நோக்கி இருந்தார். சாயங்காலம் சற்று காலாற நடந்துவிட்டு வர எண்ணி கடைத்தெரு பக்கம் சென்றவரை, சாரங்கா என்ற குரல் அழைக்கவே திரும்பி பார்த்தார். அவருடன் படித்த ஜானகி ராமன் என்று அறிந்ததும் ஒரே ஆச்சரியம். கிட்டத்தட்ட முப்பது  வருடம்  கழிந்து  நண்பனைப் பார்த்ததில் மனம் மகிழ்ந்து என்ன ஜானகி  எப்படிஇருக்கே என்றார்.தன குடும்பம் சென்னையில் இருப்பதாகவும், தன ஒரே மகள் திருமணம் குறித்து வரன் தேட கும்பகோணம் வந்ததாகவும் சொன்ன ஜானகிராமன், சாரங்கனின் விவரம் கேட்டறிந்தார். எம் எஸ் சி படித்த தன மகளுக்கு கணேஷ் போன்ற வரன் கிடைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்ற அவரிடம் தன மகன் தீபாவளிக்கு வரும்போது பேசி பார்கிறேன் என்றார் சாரங்கன்.

வீடு வந்தவுடன் மனைவியிடம் விஷயத்தை சொல்லி கணேஷுக்கு நல்ல பொருத்தமா இருக்கும் என்று நினைப்பதாக உரைத்தார். என்ன இருந்தா என்ன, கல்யாணம் ஆன கையோட அமெரிக்காவுக்கு பொண்டாட்டியோட போய்டுவான், நாம தனியா தானே இருக்கணும் என்று  கண்ணீர்  விட்ட மனைவியை எப்படி தேற்றுவது என்று குழம்பினார் சாரங்கன். ரெண்டு மாதங்கள் உருண்டோடின. கணேஷ் தீபாவளிக்கு முன் தினமே வந்து சேர்ந்தான். அவனிடம் மெதுவாக திருமணத்தை பற்றி பேசிய சாரங்கனிடம், இதெல்லாம் நீங்கள் பார்த்து என்ன செய்தாலும் எனக்கு ஓகே ! என்றான். ஒரு நிமிடம் தன்னை மறந்து மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப்போன சாரங்கன்,கல்யாணியிடம் சொல்ல விரைந்தார். தீபாவளியை அமர்களமாக கொண்டாடிய சாரங்கன் தன நண்பன் ஜானகிராமன் வீட்டாரை மறுதினம் விருந்துக்கு அழைத்தார். மகள் ஐஸ்வர்யாவுடன் அவர்கள் வந்து ஒரு நாள் முழுவதும் இருந்ததில் எல்லோருக்கும் சந்தோஷம. பெண்ணைப் பார்த்த கணேஷுக்கு மிகவும் திருப்தி என்றவுடன் மற்ற விஷயங்களை பேசி முடித்தார் சாரங்கன். தடபுடலாக நடந்த திருமணத்தில் செல்வந்தரான ஜானகிராமன் ஊரே பிரமிக்கும் வகையில் எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தார். திருமணம்ஆகி ஒரு வாரம் ஆன பிறகு, கணேஷ் தன வேலை விசயமாக ஏற்பாடு செய்து விட்டு வர வெளியே சென்றதும் , கல்யாணி சோகமான முகத்துடன் அவரை பார்த்து, ஏன்னா இன்னும் எத்தனை நாள்லே அமெரிக்காவுக்கு கிளம்பறான்? என்றாள். தெரியல்லியே கேட்டு சொல்லறேன் என்று அரை மனதுடன் கூறிய சாரங்கன் பெரு மூச்சு விட்டார். மாலை ஆறு மணி அளவில், அப்பா என்று அழைத்தவாறே உள்ளே வந்த கணேஷ் அம்மாவைப் பார்த்து, அம்மா எல்லா ஏற்பாடும் பிரமாதமா ஆயிடுத்து. பத்து நாளில் வேலையை ஆரம்பிக்கலாம் என்றான். அப்போ அமெரிக்காவுக்கு எப்போ கிளம்புவதாக உத்தேசம் என்று கேட்ட தாயிடம், கண் சிமிட்டியவாறே, ஏம்மா எப்படா இவன் கிளம்புவான் என்று இருக்கா என்றான்.  பொலபொல  வென்று கண்ணில் நீர் வடிய அழ துவங்கினாள் கல்யாணி. என்னம்மா நான் விளையாட்டாக சொன்னால் இப்படியா என்று பதறிய கணேஷ் தந்தையையும் தாயையும்  ஒன்றாய்  அமர வைத்தான். நீங்கள் நினைப்பது போல  அமெரிக்காவில்   வேலை செய்யப் போவது இல்லை.. இந்த கம்ப்யுட்டர் யுகத்தில்  எங்கே இருந்து கொண்டும் எல்லா வேலையும் செய்ய முடியும். இங்கிருந்தே அமெரிக்காவுக்கு சாப்ட்வேர்  அனுப்பவும்   ஏற்பாடு செய்துவிட்டேன் என்றான் கணேஷ்!. சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போன சாரங்கனும் கல்யாணியும் கணேஷையும் ஐஸ்வர்யாவையும் இறுகப் பிடித்து முத்தமிட்டனர்.

Friday, 2 October 2009

ராஜம் .... என்று அழைத்தவாறே உள்ளே வந்தார் சங்கரன். நம்ம ஜானகிக்கு ஒரு வரன் தரகர் குடுத்தாரோன்னோ அது நன்னா பொருந்தி இருக்காம். மாப்பிள்ளை அமெரிக்காவிலே கம்பியுடர் கம்பனிலே வேலை பார்கிறானாம். இருபத்திநாலு வயதுதானாம். மாசம் 9000 டாலர் சம்பளம். ஒன்னோட புள்ளைக்கு மெயில் எழுதி விவரம் சொல்லிடறேன்.  மாப்பிள்ளையும்  கூட   டல்லாஸ்லெ தான் வேலை பார்க்கிறார், அதாலே அவனை ஒரு எட்டு போய பார்த்துட்டு வாடான்னு சொல்லலாம்னு நினைக்கறேன். என்ன சரியா என்று சங்கரன் சொன்னதும் ராஜம் தலை ஆட்டினாள். சங்கரனுக்கு ஒரு மகள் ஒரு மகன், பெயர் சேகர்.. படித்துவிட்டு கலியாணம் ஆன கையோடு தன மனைவீ சுமதியுடன் அமெரிக்காவில் வேலை பார்க்க சென்றுவிட்டான். எட்டு வருடங்கள் ஆகியும் தாயகம் வரும் வாய்ப்பே இல்லை.
சேகருக்கு திருமணம் ஆன போது. ஜானகிக்கு 14 வயது. மன்னி மன்னி என்று சுற்றி வரும் அவளை சுமதிக்கு மிகவும் பிடித்துவிட்டதில் ஆச்சரியம் இல்லை. இன்ஜினீயரிங்  கோர்ஸ் முடித்துவிட்டு அமெரிக்காவிலேயே தானும் ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஜானகி விரும்புவது சுமதிக்கு தெரியும். பெண் பார்க்க மாப்பிள்ளை ராஜீவ் ஞாயிற்றுக்கிழமை வருவதாக ஏற்பாடு. ஞாயிறன்று சமையல் வேளையில் முழுகியிருந்த ராஜம் காலிங் பெல் சப்தம் கேட்டு ஓடிப்போய் கதவை திறந்தாள். கையில் காய்கறிகள் மற்றும் இதர சாமான்களுடன் நின்ற சங்கரனை பார்த்தவுடன், “ஏன்னா, ஜானகியை கூட்டிண்டு போயிருக்கலாமே "என்று அவர் கையில் இருந்து சாமான்களை தன கையில் வாங்கி உள்ளே சென்றாள். மாலை ஆறு மணிக்கு மாப்பிள்ளை வீட்டார் வந்து இறங்கினர். ராஜிவ் நல்ல உடற்கட்டுடன் மிக நிறமாகவும் இருந்ததை கண்டு சங்கரனும் ராஜமும் மிக மகிழ்ந்தனர். காபி டிபன் கொடுக்கும் சாக்கில் ஜானகியும் ராஜிவ் பக்கம் ஒரு பார்வையை விட்டு தன்னுடைய சம்மதமும் சொன்னவுடன் சங்கரன் மற்ற விஷயங்களை பேசத்தொடங்கினார். ஒரு நகை கடையைப்போல் இருந்த மாப்பிளையின் தாயார் கேட்ட எல்லா அயிட்டங்களுக்கும் ஓகே ஓகே என்று கூறிய சங்கரன் கடைசியாக சொன்ன 100 பவுன் கொஞ்சம் கவலையை அளித்தது. ரிடையர் ஆன பின் பி எப், க்ராசுவிடி  என்று வந்த பணத்தில் தான் அன்றாட ஜீவனத்திற்கென்று ஒரு பெரும் பகுதியை முதலீடு செய்திருந்தார். ஜானகியின் திருமண செலவிற்கு என்று வைத்திருந்த தொகையில் இந்த நூறு பவுன் கொடுப்பது முடியாது என்று சங்கரனுக்கு கண்டிப்பாக தோன்றவே மனம் குழம்பினார். சங்கரனின் குழப்பத்தை கண்ட ராஜம், "ஏன்னா, நூறு பவுன் சித்தே கஷ்டம்னு யோசிக்கறேளா" என்று காதை கடித்தாள். இல்லை, சேகரிடம் கேட்டு ஏற்பாடு செய்துவிடலாம், கவலைப்படாதே என்றவாறு மாப்பிள்ளை வீட்டாரிடம் சம்மதம் என்று கூறிய சங்கரன் வாயில் வரை சென்று வழி அனுப்பிவிட்டு உள்ளே வந்தார். விவரமாக எல்லா விவரங்களையும் சேகருக்கு ஈமெயில் செய்துவிட்டு சற்று ஆசுவாசமாக உட்கார்ந்தவரை பார்த்து ராஜம், "ஏன்னா கொஞ்சம் அதிகம்னு தோணலையா உங்களுக்கு" என்றாள். "நல்ல படிப்பு, நல்ல வேலை, வெளிநாட்டு உத்யோகம்னா கொஞ்சம் அதிகம்தான் ஆகும்னு தெரியாதா" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சங்கரன்.
ஈமெயில் எழுதி பதினைந்து நாட்கள் ஆகியும் சேகரோ அல்லது சுமதியோ பதில் போடாதது ராஜத்திற்கு கவலை அளித்தது. ஜானகியின் மேல் பாசம் கொண்ட சுமதி இப்படி என் பதில் போடாமல் இருக்கிறாள் என்று புரியாத ராஜம், "நீங்கள் ஒரு முறை போனில் பேசி பாருங்களேன்" என்றாள். போனில் பேசிய சங்கரனிடம், " அப்பா நீங்கள் எழுதிய ஈமெயிலை பார்த்தோம் ஆனா கொஞ்சம் அதிகம்னு தோணலையா உங்களுக்கு. அதுவும் இப்ப இருக்கற சிச்சுவேஷன்லே இத்தனை பெரிய தொகைய புரட்டறது கஷ்டம்னு ...." இழுத்த சேகரிடம் ஒன்னும் சொல்ல தோன்றாமல், " சரி நீ பார்த்து எது சரீன்னு படறதோ அப்படி செய்" என்று போனை வைத்தார். நல்ல வரனை சில லட்சங்களுக்காக விடுவதா அல்லது வேறென்ன ஏற்பாடு செய்வதென்று தோன்றாமல் குழம்பிய சங்கரன், " ராஜம் இந்த பணம் சேகருக்கு ஒரு பெரிய தொகையே இல்லேன்னு எனக்கு தெரியும். அவன் ஏன் அப்படி சொன்னான்னு தான் புரியலை" என, ராஜம் " சுமதிக்கு ஜானுனா உயிராச்சே, அவளும் இத்தனை நல்ல வரன் வரும்போது இப்படி ஏன் இருக்கா" என்று கவலையுற்றாள். "சரி, நான் மாப்பிள்ளை காறாள்கிட்டே எங்களால் இயலாதுன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வரேன் " என்று புறப்பட்ட சங்கரனை பார்த்து கண்ணீர் விட்டாள் ராஜம்.
இதற்க்கு நடுவில் கனவுலகில் மிதந்து கொண்டிருந்த ஜானகிக்கு அண்ணனும் அண்ணியும் இப்படி நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியாக இருந்தது. மனம் வெதும்பி அழுதவளை தேற்றினாள் ராஜம். பதினைந்து நாட்கள் கடந்தபின் திடீரென்று அண்ணனும் மன்னியும் வாசலில் காரில் இருந்து இறங்குவதை கண்ட ஜானகிக்கும் ராஜத்திற்கும் ஒன்றுமே புரிய வில்லை. தூங்கிக் கொண்டிருந்த சங்கரனை எழுப்பிய ராஜம் " வா சேகர், வா சுமதி என்ன செய்தி கூட இல்லாமே சர்ப்ரைஸ் ! " என்று வரவேற்றாள். "ஜானு! " என்று அழைத்தவாறே உள்ளே வந்த சுமதியை ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள் ஜானகி. சாப்பிட்டு விட்டு அமர்ந்து கொண்ட தாயிடம் "அம்மா நான் பணம் ஏற்பாடு செய்யாதது உனக்கும் அப்பாவுக்கும் சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது இல்லையா"  என்ற சேகரிடம் , "அப்படியெல்லாம் இல்லைடா, உன்னால் முடிந்தா நீ நிச்சயம் செய்வே என்று எங்களுக்கு தெரியும். எதோ ஒரு தவிர்க்க முடியாத காரணம் தான் நீ அப்படி நடந்து கிட்டேன்னு அப்பா சொன்னார். அதான் உடனே இந்த வரன் வேண்டாம்னு சொல்லிட்டோம்." என்றாள் ராஜம். அம்மா என்று அவளை கட்டிக்கொண்ட சுமதி, " நாங்கள் ஈமெயில் பார்த்தவுடன் மாப்பிள்ளையை பற்றி விசாரித்தோம். அவருக்கு பல கெட்ட பழக்கங்கள் இருப்பதாகவும், அமெரிக்காவிலேயே ஒரு பெண்ணுடன் பழகுவதாகவும் அறிந்தோம். இதை உங்களிடம் நேராக சொல்ல சற்று யோசித்தோம்." என்றாள். அதிந்து போன சங்கரனும் ராஜமும் "நல்ல வேளை  இந்த வரனை வேண்டாமென்று விட்டது." என்று நினைத்தனர். அருகில் இருந்த ஜானகி மட்டும் சோகமாய் இருப்பது கண்ட சுமதி புன்முறுவல் பூத்தவளாய் "ஏய் ஜானு, இந்த போடோவை கொஞ்சம் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லேன்" என்றாள். போட்டோவை கையில் வாங்கி பார்த்துவிட்டு ,"யாரு மன்னி இது ஹிந்தி பட ஹீரோ மாதிரி நல்ல நிறமா படு ஸ்மார்டாக இருக்காரே !"என்ற ஜானகியிடம் "இவர் வாஷிங்கடனில் பெரிய வேலையில் இருக்கார். இந்தியாவிலே இன்ஜினியரிங் பண்ணின பொண்ணு தான் வேணுமாம், பண்ணிக்கறயா" என்று கண் சிமிட்டினாள் சுமதி. ஒன்றும் புரியாமல் குழம்பிய ஜானகியிடம் தன கசின் ராகவ் ஐ ஐ டி மதராஸில் படித்து இப்போ அமெரிக்காவிலே இருப்பதாகவும் ஜானகியின் போட்டோவை தங்கள் ஆல்பத்தில் பார்த்ததில் இருந்து அவளைத்தான் திருமணம் செய்வேன் என்று சொன்னதையும் சொல்ல, சுமதியை கட்டி பிடித்தபடி குழந்தை போல தேம்பினாள் ஜானகி.

Related Posts with Thumbnails