Thursday, 24 September 2009
அக்டோபர் மாதம் வந்தவுடனேயே டிசம்பர் மாத சங்கீத சீசனுக்கு டிக்கட் ஏற்பாடு செய்ய ஆரம்பிக்கும் சென்னை ரசிகர்களுக்கு கர்நாடக சங்கீதம் பாடும் வித்வான்கள் புதிதல்ல. இருந்தாலும் கடந்த பத்து வருடங்களாக உள்ளூர் சபாக்களையும் அயல் நாட்டு மேடைகளையும் கலக்கிக்கொண்டு வரும் ஒரு மிக அற்புதமான ஜோடியை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆமாம், சௌ ரஞ்சனி-காயத்ரி பற்றி தான் சொல்லுகிறேன். நல்ல மனோதர்மம், ஸ்ருதி சுத்தம், லய நிர்ணயம் மற்றும் அபரிமிதமான தமிழ் உச்சரிப்புடன் பாடும்போது மெய் மறந்து விடுகிறது. அவர்கள் பாடும் "கலியுக வரதன் " இதோ, ரசிக்கவும்.
Labels: Music






Here is the link - http://youtube.com/watch?v=7ht1Anwots